ரத்த தான முகாம்
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேதாஜி சமூக நல அறக்கட்டளை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராம வன்னி, டாக்டர் மதிவாணன் முகாமை துவக்கி வைத்தனர். அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய மறவர் அறக்கட்டளை, ஆப்பநாடு மறவர் நலச்சங்கம், முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.