மேலும் செய்திகள்
சங்கடஹர சதுர்த்தி விழா
8 hour(s) ago
பேரிடர் அவசர கால பயிற்சி
8 hour(s) ago
வருடாபிஷேகம்
8 hour(s) ago
இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
8 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (09.11.2025)
8 hour(s) ago
பரமக்குடி : பரமக்குடி பணிமனையிலிருந்து 73 வழித்தடங்களில் இயங்க வேண்டிய பஸ்கள், தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கால் 30 வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. 385 பணியாளர்களில் 50 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.தமிழக முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில் பரமக்குடியில் 13 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும் தொலைதுார பஸ்கள் 10க்கும் குறைவாகவே இயங்கின.இந்நிலையில் பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கியதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். நேற்று காலை முதல் நாள் முழுவதும் மழை பெய்ததால் ஒரே டவுன் பஸ்களில் படிக்கட்டு வரை நனைந்தபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டது.சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் ராஜன் கூறியதாவது: ஸ்டிரைக் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் ரெகுலர் ஷிப்டுகளில் உள்ளவர்கள் பணியில் உள்ளனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக குறையும். மேலும் பரமக்குடியில் 50 நிரந்தர பணியாளர்களே பணிக்கு சென்றுள்ளனர். 30 வழித்தடங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு தடத்திலும் ஒரு முறை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு கணக்கில் காண்பிக்கின்றனர். வரும் நாட்களில் பஸ்கள் முழுமையாக இயங்காது என்றார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago