உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரவில் நாய்கள் குரைத்ததால் சிதறி ஓடிய ஆடு திருடர்கள் சி.சி.டி.வி., காட்சி பரவுகிறது

இரவில் நாய்கள் குரைத்ததால் சிதறி ஓடிய ஆடு திருடர்கள் சி.சி.டி.வி., காட்சி பரவுகிறது

பரமக்குடி: -ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரவில் ஆடு திருடியபோது நாய்கள்குரைத்ததால் சிக்கியஇரண்டு ஆடுகளை மட்டும் துாக்கிக்கொண்டு ஆடு திருடர்கள் சிதறி ஓடிய வீடியோ காட்சி பரவுகிறது.பரமக்குடி அருகே விளத்துார் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நடு இரவில் மூன்று பேர் கும்பல் இரண்டு ஆடுகளை திருடிச் சென்றனர்.தொடர்ந்து இப்பகுதியில் ஆடுகள் திருடப்படுவதால் ஆடு வளர்ப்போர் தங்கள் வீடுகளில் சி.சி.டி.வி., பொருத்தி உள்ளனர்.ஆடுகள் திருட்டு போனது குறித்து சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்த போது மூன்று பேர் நள்ளிரவில் இரண்டு ஆடுகளை இழுத்துச் சென்றது தெரிந்தது. அப்போது நாய்கள் குரைத்ததால் சிதறியடித்து ஓடியதும் பதிவாகி இருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதே போல் பல கிராமங்களில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு அவ்வப்போது நடந்து வருவதாகவிவசாயிகள் தெரிவித்தனர்.சி.சி.டி.வி., பதிவு அடிப்படையில் போலீசார் ஆடு திருடர்களை உடனடியாக கைது செய்யவும் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை