உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி கோயிலில் சக்கர தீர்த்த தீப ஆரத்தி விழா

திருப்புல்லாணி கோயிலில் சக்கர தீர்த்த தீப ஆரத்தி விழா

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயில் முன்புறமுள்ள சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் 5ம் ஆண்டு தீப ஆரத்தி விழா நடந்தது.மாலை 4:00 மணிக்கு திருப்புல்லாணி பெருமாள் கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் தீப ஆரத்தி குழுவினர் நாமாவளி பாடியவாறு உலா வந்தனர். மாலை 6:30 மணிக்கு சக்கர தீர்த்த தெப்பக்குளம் படித்துறையில் ஐந்து வகை அலங்கார தீபாராதனைகள், துாபக்கால்கள் காண்பிக்கப்பட்டது. முன்னதாக தெப்பக்குளத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. படிக்கட்டுகளில் நுாற்றுக்கணக்கான நெய் தீபங்களை பெண்கள் ஏற்றினர். ஏற்பாடுகளை தர்மரக்சன சமிதி, ஆன்மிக அமைப்புகள், ராமேஸ்வரம் ராமசேது மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை