| ADDED : டிச 06, 2025 05:35 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக செங்குடி, பூலாங்குடி, எட்டியதிடல், முத்துப் பட்டினம், சேத்திடல், சீனாங்குடி, புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சவேரியார் பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வங்க கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் உட்பட மாவட்டம் முழு வதும் கன மழை பெய்தது. இதனால் மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கியது. நெற்பயிர்களை போன்று மிளகாய் செடிகளுக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை என்பதால் மிளகாய் வயல்களில் தேங்கிய தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பெரும் பாலான பகுதிகளில் வயல் களில் தேங்கிய தண்ணீரால் மிளகாய்ச் செடிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் மிளகாய் நாற்றுகளை விலைக்கு வாங்கி மீண்டும் வயல்களில் நடவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மிளகாய் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மிளகாய் விவசாயிகளுக்கு நிவா ரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.