உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

பரமக்குடி : பரமக்குடி காந்தி சிலை முன்பு ராமநாதபுரம் மாவட்ட காங்., எஸ்.சி.,அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., எம்.பி., ஆனந்தகுமார் ஹெக்டே வரும் லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றால் இந்தியஅரசியல் சட்டத்தை மாற்றி அமைப்போம் எனக் கூறினார். இதையடுத்து பரமக்குடியில் அவரை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜா தலைமை வகித்தார். நகர் தலைவர் அழகர் மலையான் வரவேற்றார். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், நகர் தலைவர் அகமதுகபீர், பொதுக்குழு உறுப்பினர்ஜோதி பாலன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் இப்ராஹிம், மகளிர் அணி ராமலட்சுமி, நிர்வாகிகள் செந்தில், போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ