உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தங்கப்பதக்கம் வென்ற  மாணவருக்கு பாராட்டு 

தங்கப்பதக்கம் வென்ற  மாணவருக்கு பாராட்டு 

ராமநாதபுரம் : கேலோ இந்தியா போட்டியில் கையுந்து பந்து தங்கம் வென்றஅணியில் பங்கேற்ற ராமநாதபுரம் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தேசிய அளவில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் தமிழக கையுந்து பந்து அணியில் ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை முகமதியா பள்ளி முன்னாள் மாணவர் அகமது வபிக் கலந்துகொண்டார். இந்த அணி தங்கம் வென்றது.வெற்றி பெற்ற மாணவரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரேணுகா, முகமதியா பள்ளி தாளாளர் அகமது கபீர், தலைமையாசிரியர் ஜவஹர் அலி, உதவி தலைமையாசிரியர்கள் சுரேஷ் பாபு, ஷாஜஹான் சலீம், உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர் சங்க மாவட்ட செயலாளர் ராமேஷ், அஜீஸ்கனி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை