உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கீழக்கரை : -அழகப்பா பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கு இடையிலான (ஆண்கள் ) செஸ் போட்டி பரமக்குடி அரசு கலை கல்லுாரியில் நடந்தது.அழகப்பா பல்கலை இணைப்பு பெற்ற 20 கல்லுாரிகள் செஸ் போட்டியில் பங்கேற்றனர். இதில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரி அணியினர் நான்காம் இடம் பெற்று பரிசு கோப்பை வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களை முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் சாகிப், செயலர் ஷர்மிளா, நிர்வாக இயக்குனர் ஹமித் இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முகமது, செயல்திட்ட அலுவலர் விஜயகுமார், முதல்வர் ராஜசேகர், உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.பரிசளிப்பு விழாவில் அழகப்பா கலை கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார், உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமரன், பரமக்குடி அரசு கல்லுாரி முதல்வர் சிவகுமார் ஆகியோர் வெற்றி கோப்பை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை