உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சென்டர் மீடியனில் தொடரும் விபத்துகள் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் தேவை

சென்டர் மீடியனில் தொடரும் விபத்துகள் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் தேவை

ஆர்.எஸ்.மங்கலம் : மங்கலம் சென்டர் மீடியனில் தொடரும் விபத்துக்களை கட்டுப்படுத்த ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் பகுதியில் ரோட்டின் குறுக்கே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சென்டர் மீடியன் பகுதியில் முறையான எச்சரிக்கை பலகைகளோ, ஒளிரும் எச்சரிக்கை சிவப்பு விளக்குகளோ, பொருத்தப்படவில்லை.இதனால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இரவில் சென்டர் மீடியன் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்கள் நடக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் 15க்கும் மேற்பட்ட வெளி மாநில வாகனங்கள் இப்பகுதியில் விபத்திற்குள்ளாகி ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர்.இப்பகுதியில் தொடரும் விபத்துக்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அப்பகுதியில் தொடரும் விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக சோலார் எச்சரிக்கை சிவப்பு விளக்குகள் அமைத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை