உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி

 கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி

கமுதி: கமுதியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 72வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்தது. கூட்டுறவு சார்பதிவாளர்கள் வேல்முருகன், சண்முகப்பிரியா முன்னிலை வகித்தனர். செயலாட்சியர் ப்ரீத்தி வரவேற்றார். பணியாளர்கள்,பொதுமக்கள், உறுப்பினர்களுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் கிராம சங்கம், நகர வங்கி, நிலவள வங்கி, ராம்கோ பண்டகசாலை உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொது மேலாளர் போஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்