மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
5 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
5 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
5 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
5 hour(s) ago
தொண்டி, : காரைக்கால் மீனவர்கள் வரையறை மீறி மீன் பிடிப்பது, மீன்பிடி வலைகளை அறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் கூறினர்தொண்டி அருகே நம்புதாளை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தினகரன், கருப்புசாமி. இருவரும் நேற்று முன்தினம் நாட்டுப் படகில் 10 கடல் மைல் தொலைவில் சென்று வலையை விரித்து மீன் பிடித்தனர். அப்போது புதுவை காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் சென்று வலையை அறுத்து விட்டுச் சென்றனர்.இச்சம்பவம் அடிக்கடி நடப்பதால் காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர். நம்புதாளை மீனவர்கள் கூறியதாவது:ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பல ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் உள்ளனர். வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் டோக்கன் வழங்குவதால் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறோம். ஆனால் காரைக்கால் மீனவர்களுக்கு டோக்கன் முறை இல்லாததால் 24 மணி நேரமும் மீன் பிடிக்கின்றனர். எல்லை தாண்டி வந்து நாங்கள் விரித்துள்ள வலைகளை சேதபடுத்துகின்றனர். காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago