உள்ளூர் செய்திகள்

 ஆபத்தான பனை மரம்

திருவாடானை: மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலத்தில் ஆபத்தான ஒற்றை பனைமரம் உள்ளது. பட்டுப்போன நிலையில் ஓலை சரிந்து விழும் நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், பட்டுப்போன பனை ஓலை விழும் போது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே பட்டுப்போன ஒற்றை பனை மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி