உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முதல்வர் அறிவித்தபடி ராமநாதபுரம் நகரில் 6 வழிச்சாலை அமைக்க முடிவு

 முதல்வர் அறிவித்தபடி ராமநாதபுரம் நகரில் 6 வழிச்சாலை அமைக்க முடிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில்4 வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதையடுத்துமுதற்கட்டமாக ரூ.25 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து ஆறு வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்ட தலைநகரம் ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சராசரியாக ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக நகரில் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், அக்.,3ல் ராமநாதபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த முதல்வர் ஸ்டாலின் நகரில் நெடுஞ்சாலை பகுதி 4 வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து முதற்கட்டமாக ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் கீழக்கரை பாலத்தில் இருந்து ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையை பட்டணம் காத்தான் ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், சட்டசபை தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ளதால் முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத கீழக்கரை பாலம் துவங்கி கிழக்கு கடற்ரை சோதனைச்சாவடி வரைஆறு வழிச்சாலை அமைக்க ரூ.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அரசிக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு செய்த பிறகு 6 வழிச்சாலை பணிகள் துவங்க உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை