உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விலைவிபர அட்டையுடன் தங்கம் விற்பனை : கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் தகவல்

விலைவிபர அட்டையுடன் தங்கம் விற்பனை : கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் தகவல்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் 28வது கிளையை நடிகர் பிரபு திறந்து வைத்தார். ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரவிசந்திர ராமவன்னி, லட்சுமி, குமரன் சேதுபதி, டாக்டர் மதுரம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் டி.எஸ்.கல்யாணராமன், செயல் இயக்குனர்கள் ராஜேஷ் கல்யாணராமன், ரமேஷ் கல்யாணராமன் வரவேற்றனர். முதல் தளத்தில் 'பி.ஐ.எஸ்.916' நகைகளும், இரண்டாம் தளத்தில் கம்மல், வெள்ளி, வைரம் நகைகள், ராசி கற்களும் உள்ளன. நிர்வாக இயக்குனர் டி.எஸ்.கல்யாணராமன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் 28வது கிளையை திறப்பதில் பெருமையடைகிறோம். இதை தொடர்ந்து அக்., 2ல் மங்களூருவிலும், அக்.,30ல் ஆந்திரா குண்டூரிலும் கிளைகள் துவங்க உள்ளோம். நாங்கள் 100 சதவீதம் 'பி.ஐ.எஸ்.916' முத்திரை பதித்த நகைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்கள், இந்த முத்திரையை பார்க்க சிறப்பு லென்ஸ் வைத்துள்ளோம். இந்தியாவிலேயே நாங்கள் மட்டுமே ஒவ்வொரு நகையிலும் அவற்றின் குறைந்தபட்சம் செய்கூலியை காட்டும் விலைவிபர அட்டையை வைத்துள்ளோம். ஐந்து டிசைனர்கள் கொண்டு லேட்டஸ்ட் மாடல்கள் வரை டிசைன் செய்து கோவை மற்றும் கேரளாவில் நகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். எங்களிடம் உள்ள டிசைன்கள் வேறு எங்கும் கிடைக்காது. 1000 ரூபாய்க்கு நகை வாங்கினால் கல்யாண் கோல்டு கார்டு வழங்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை