உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆற்றின் முகவத்துவாரங்களை துார்வார மீனவர் வலியுறுத்தல் 

 ஆற்றின் முகவத்துவாரங்களை துார்வார மீனவர் வலியுறுத்தல் 

தொண்டி: கடற்கரை ஆற்றின் முகத்துவாரங்களை துார்வார வேண்டும் என்று மீனவர்கள் வலி யுறுத்தியுள்ளனர். தொண்டி கடலோர பகுதியில் இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளும், 77 விசைபடகுகளும் உள்ளன. பாசிபட்டினம், காரங்காடு, நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றுமுகத் துவாரங்கள் உள்ளன. அப்பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை ஆற்று முகத்துவாரங்களில் நிறுத்துவது வழக்கம். இந்த முகத்துவாரங்கள் துார்ந்து விட்டதால் படகுகளை நிறுத்த முடியாமல் கடலில் நிறுத்துகின்றனர். கடல் பெருக்கம் மற்றும் சீற்றம் ஏற்படும் போது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன. இது குறித்து நம்புதாளை மீனவர்கள் கூறியதாவது: ஆற்று முகத் துவாரத்தை துார்வாராமல் போனதால் படகுகளை கடலில் நிறுத்துவதால் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்புதாளையில் கடல் சீற்றமாக இருந்ததால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகை நங் கூரம் இட்டு நிறுத்துவற்காக சென்ற வாலிபர் அலையில் சிக்கி இறந்தார். ஆற்று முகவத்துவாரம் இருந்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. வெள்ள அபாயம் குறைந்து மீன்பிடி தொழில் மேம்படும். கடற்கரை துாய்மை அடையும். எனவே ஆற்று முகத்துவாரம் உள்ள பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து துார்வார நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை