மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
10 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (19.11.2025)
12 minutes ago
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
12 minutes ago
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
15 minutes ago
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணம் தென்னந்தோப்பில் கீழகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் 70, காவலாளியாக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் மாலை லட்சுமணன் மற்றும் பிரண்டை குளம் வேலு 70, இருவரும் பேசியபடி மணிநகர் ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியில் பின்புறம் வைகை ஆற்றில் நடந்து சென்றனர். அப்போது மர்ம நபர் முதியவர்களை தாக்கிய நிலையில் வேலு சம்பவ இடத்தில் பலியானார். லட்சுமணன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எமனேஸ்வரம் போலீசார் விசாரித்தனர். கொலையில் ஈடுபட்ட என்.வளையனைந்தல் கிராமத்தைச் சேர்ந்த சீமைச்சாமி மகன் அலெக்ஸ்பாண்டி 26, மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், தென்னந்தோப்பு செல்லும் வழியில் இளைஞர் மது அருந்தி உள்ளார். இதை முதியவர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ்பாண்டி அவர்களை தாக்கிய நிலையில் வேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
10 minutes ago
12 minutes ago
12 minutes ago
15 minutes ago