உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

ராமநாதபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

ரெகுநாதபுரம், : ரெகுநாதபுரம் நாகா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மாணவர்கள் வேட்டி, மாணவிகள் புடவை அணிந்து வந்தனர். பள்ளித் தாளாளர் வெண்மதிநாதன் தலைமை வகித்தார். முதல்வர் வனிதா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரேணுகா நன்றி கூறினார். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.* ரெகுநாதபுரம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.* கீழக்கரை அருகே மாயாகுளத்தில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆதித்தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். திருப்புல்லாணி யூனியன் துணை சேர்மன் சிவலிங்கம் முன்னிலை வைத்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை