உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காந்தி அஸ்தி கரைத்த தினம் அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி

காந்தி அஸ்தி கரைத்த தினம் அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி

ராமேஸ்வரம் : காந்தி அஸ்தி கரைத்த தினமான நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் சர்வோதயா மேளா சங்கம் சார்பில் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.மகாத்மா காந்தி அஸ்தி 1948 பிப்.12ல் நாடு முழுவதும் முக்கிய நதிகள், தீர்த்தங்களில் கரைக்கப்பட்டது. இந்நாளை சர்வோதயா மேளா தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி நேற்று 76வது சர்வோதயா மேளா தினம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் சர்வோதயா மேளா சங்க நிர்வாகிகள் காந்தி திருவுருவப் படத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பின் அக்னி தீர்த்தக் கடலில் பிரார்த்தனை செய்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.இதில் மதுரை மாவட்ட சர்வோதயா மேளா சங்கம் தலைவர் கண்ணன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், ராமேஸ்வரம் மாவட்ட என்.எஸ்.எஸ்., திட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை