உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவிகளுக்கு கோலப்போட்டி

மாணவிகளுக்கு கோலப்போட்டி

பரமக்குடி : பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவையொட்டி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான சக்தி, வளர்ச்சி பாதையில் இந்தியா என்ற நிலைகளில் கோலங்கள் வரையப்பட்டன. காலை 10:00 மணிக்கு துவங்கிய போட்டிகள் மதியம் 12:00 மணிக்கு நிறைவடைந்தது. போட்டியில் மாணவிகள் மற்றும் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதல்வர் ஜெயபிரமிளா நன்றி கூறினார். நிர்வாக அலுவலர் சதீஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார். கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டு விழா நிகழ்வுகளில் பரிசளிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ