உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடர் மழையால் ராமநாதபுரத்தில் நிலத்தடி நீர்மட்டம்...உயர்வு : உவர்ப்பு தன்மை குறைந்துள்தால் மக்கள் மகிழ்ச்சி

தொடர் மழையால் ராமநாதபுரத்தில் நிலத்தடி நீர்மட்டம்...உயர்வு : உவர்ப்பு தன்மை குறைந்துள்தால் மக்கள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் : வடகிழக்கு பருவமழை அதிகரிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர், புறநகர், பகுதிகளில் உள்ள ஊருணி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் நீர்மட்டத்திற்கு ஆதரமான ஊருணிகள் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உவர்ப்பு தன்மை குறைப்து ஆழ்குழாய் நீரை அன்றாட தேவைகளுக்கு மக்கள் பயன்படுத்தும் நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரத்தில் வைகை அணை தண்ணீர், மழை நீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறையின் கீழ் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறு பாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள் என 5660 நீர்நிலைகள் உள்ளன. மாவட்டத்தை பொறுத்தமட்டில் நிலத்தடி நீர் 30 முதல் 40 அடியில் கிடைத்தாலும் உப்பு நீராகவே உள்ளது. இதனால் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு காவரி குடிநீர் மற்றும் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை அதிகரிப்பால் ஊருணிகள், குளங்கள் 40 முதல் 70 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அவற்றை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி நீரின் உவர்ப்பு தன்மை குறைந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதராமாக ராமநாதபுரம் நகர், சக்கரகோட்டை, பட்டணம்காத்தான் உள்ளிட்ட கிராமங்களில் கோயில் குளங்கள் மற்றும் ஊருணிகள் ஏராளமாக உள்ளன. தற்சமயம் வடகிழக்கு பருவமழை நீர் வரத்தால் பெரிய கண்மாய், சக்கரகோட்டை கண்மாய், ராமநாதபுரம் நகரில் உள்ள சிதரம்பரம் பிள்ளை ஊருணி, முகவை, செம்மங்குண்டு உள்ளிட்ட ஊருணிகளில் தண்ணீர் உள்ளது. இதனால் உவர்ப்பு தன்மை குறைந்துள்ளது. ஆழ்குழாய் நீரினை பொதுமக்கள் குளிக்க, துவைக்க, பாத்திரங்கள் கழுவுவதற்கு பயன்படுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை