உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி மஞ்சள் பட்டணத்தில் மஞ்சள் கொத்துகள் அறுவட; ஜோடி ரூ.40 வரை விற்பனை

பரமக்குடி மஞ்சள் பட்டணத்தில் மஞ்சள் கொத்துகள் அறுவட; ஜோடி ரூ.40 வரை விற்பனை

பரமக்குடி : பரமக்குடியில் பொங்கலுக்காக பயிரிடப்பட்ட மஞ்சள் கொத்து செடிகள் மஞ்சள்பட்டணம் பகுதியில் அறுவடை செய்யப்பட்டது.பரமக்குடி நகராட்சி 1 வது வார்டில் மஞ்சள்பட்டணம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பொங்கலுக்காக மஞ்சள் விளைவிப்பது வழக்கம். இந்த ஆண்டு மழை பெய்த நிலையில் நல்ல தண்ணீர் கிடைத்ததால் 5 ஏக்கரில் மஞ்சள் செடிகள் சாகுபடி செய்யப்பட்டது.தொடர்ந்து 6 மாதம் பராமரிப்புக்கு பின் நேற்று காலை முதல் வியாபாரிகள் விலை பேசினர். ஜோடி மஞ்சள் கொத்து ரூ.20 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பாரம்பரியத்தை காக்கும் வகையில் வரும் காலங்களில் மஞ்சள் பட்டணம்பகுதியை வேளாண்துறையினர் தத்தெடுத்து விளைச்சலைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி