உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீரில் அதிக உப்பு, சுண்ணாம்பு கிராமத்தினருக்கு சிறுநீரக பாதிப்பு

குடிநீரில் அதிக உப்பு, சுண்ணாம்பு கிராமத்தினருக்கு சிறுநீரக பாதிப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா வல்லந்தை ஊராட்சி போத்தநதியில் குடிநீரில் அதிக உப்பு, சுண்ணாம்பு கலந்துள்ளது தெரியாமல் 10 ஆண்டுகளாக பருகிய நிலையில் 20க்கும் மேற்பட்டோர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.போத்தநதியில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆழ்குழாய் குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரியில் பலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கை, கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்குழாய் குடிநீரை கமுதி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லிட்டர் குடிநீரில் 10 கிராம் சுண்ணாம்பு, உப்பு கலந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அந்த குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் போத்தநதி கிராமத்தினர், 'உள்ளூரில் குடிநீரின்றி லாரியில் குடம் ரூ.12க்கு வாங்கி சிரமப்படுகிறோம். உடன் காவிரி குடிநீர், சுத்திகரித்த குடிநீர் வழங்க வேண்டும்,' எனக்கூறி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்கிராம தலைவர் ராமமூர்த்தி தலைமையில் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கிராமத்தினர் பேசினர். பாதிக்கப்பட்ட ராமு 59, காளிமுத்து 60, பாலு 60, கூறியதாவது: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அல்லது காவிரி திட்ட குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !