உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உயர்கல்வி வழிகாட்டுதல் களப்பயணம்

உயர்கல்வி வழிகாட்டுதல் களப்பயணம்

கமுதி: கமுதி ஒன்றியம் ராமசாமிப்பட்டி, கோட்டைமேடு, மண்டலமாணிக்கம், பேரையூர், கோவிலாங்குளம் ஆகிய ஐந்து பள்ளிகளில் இருந்து மாணவர்கள் உயர்கல்வி வழிகாட்டல் கல்லுாரி களப்பயணம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் நடந்தது. முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம், இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும், நான் முதல்வன் திட்டம் பற்றியும், அனைத்துத்துறை பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர். வகுப்பறை, நுாலகம், ஆய்வகங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று விளக்கம் அளித்தனர். முகாமில் 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை