உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடியில் நவ.28ல் உயர் கல்விக்கான கடன் மேளா:அரசு கலைக் கல்லுாரிக்கு வாங்க...

 பரமக்குடியில் நவ.28ல் உயர் கல்விக்கான கடன் மேளா:அரசு கலைக் கல்லுாரிக்கு வாங்க...

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து 2025 --26 ஆம் ஆண்டு உயர் கல்விக்கான கடன் மேளா நவ., 28ல் நடக்கிறது. உயர்கல்வி கற்பவர்கள் கடனுதவி தேவைப்பட்டால் முகாமில் கலந்து கொள்ளலாம். இங்கு உயர்கல்வி சேர்க்கைக்கு மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்களை மத்திய அரசின் பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டி மற்றும் கல்விக் கடன் குறித்த சந்தேகங்கள் விளக்கப்படும். இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, உயர்பட்ட படிப்பு, தொழில்நுட்ப, தொழில் முறை பாட நெறிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். அப்போது மாணவர் மற்றும் பெற்றோரின் ஆதார், பான் கார்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லுாரி சேர்க்கை கடிதம், கட்டண விபர பட்டியல், வருமான சான்றிதழ், வங்கி கணக்கு எண், ஜாதி சான்றிதழ், பூர்வீக சான்றிதழ், மாணவர், பெற்றோரின் புகைப்படம் மற்றும் வங்கி கேட்கும் இதர ஆவணங்கள் எடுத்து வர வேண்டும். இம்முகாமில் மாணவர்களும், பெற்றோரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை