மேலும் செய்திகள்
செயற்குழு கூட்டம்
4 minutes ago
திருவாடானையில் மழை: விவசாயிகள் நிம்மதி
7 minutes ago
மீனவர்களுக்கு மீன்பிடி தடை
8 minutes ago
இன்று இனிதாக ... (23.11.2025) ராமநாதபுரம்
12 minutes ago
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடா கடலில் ஆண்டு முழுவதும் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் மீன்வளம், சுற்றுச்சூழல் பாதிப்படைவதால் கடல் வளத்தை காப்பாற்ற மாற்று தீர்வை ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்கரையோர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். கீழக்கரை 21 குச்சு மீனவர் குப்பத்தைச் சேர்ந்த கிராமத்தலைவர் பூசையா மற்றும் மீனவர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது: கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை கிழக்கு முதல் மேற்கு வரை குறிப்பிட்ட தொலைவிற்கு அதிகளவில் கழிவுநீர் நேரடியாக கடலில் கலக்கிறது. ஒரு காலத்தில் கீழக்கரை கடலில் அரிய வகை முத்து, சங்குகள் கிடைத்தது. காலப்போக்கில் கடல் நீரில் கழிவு நீர் கலப்பதால் இவை அரிதாகிப் போன விஷயமாக மாறியது. பல வருடங்களாக வாறுகால்வாய் மூலமாக ஆறு இடங்களில் நேரடியாக கடலில் கலப்பதால் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், கடல் பாசிகள், கடல் பசு, டால்பின், ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. கழிவுநீர் கலக்கும் இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சார்பில் 21 குச்சு பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிய வருகிறது. இது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இது தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்கள் கிராம குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வாறுகால் அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமாக மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாக அறிவித்துள்ள நிலையில் சுற்றுச்சூழல் கழிவு நீரால் மாசடைகிறது. இதை நம்பியுள்ள ஏராளமான மீன்பிடி தொழிலாளர்களும் மீனவர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே கழிவு நீரை நேரடியாக கடலில் விடாமல் அவற்றை உரிய முறையில் சுத்திகரிப்பு செய்து மாசில்லாத நீராகவும் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவற்றில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலமாக உரம் உள்ளிட்டவைகளுக்கு மறுசுழற்சி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
4 minutes ago
7 minutes ago
8 minutes ago
12 minutes ago