உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்னும் தேடி கல்வி திட்டம் துவக்க விழா

இன்னும் தேடி கல்வி திட்டம் துவக்க விழா

கமுதி: கமுதி அருகே டி.வாலசுப்ரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் 3ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் விஜயராம் வரவேற்றார்.மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. உடன் தன்னார்வலர்கள் மேனகா, மலர்விழி, முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி