மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
41 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
41 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
42 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
43 minutes ago
பரமக்குடி : பரமக்குடி நகராட்சியில் வாறுகால்கள் துார்ந்து மூடப்பட்டு வரும் நிலையில் கழிவு நீர் செல்ல வழியின்றி சிக்கல் ஏற்பட்டுள்ளது.பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளுடன் மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக விளங்குகிறது. இங்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகர் பகுதி குறுகிய இடத்தில் அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 வீடுகள் வரை கூட முற்றம் அமைத்து கூட்டாக கட்டியுள்ளனர். மேலும் தெருக்கள் ஒவ்வொன்றும் 10 அடி முதல் 30 அடி வரை உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் 3 முதல் 5 அடி சந்துகள் கொண்ட பாதையில் வீடுகள் சீராக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர் சீராக சென்றது.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத நிலையில் வாறுகால்களில் தண்ணீர் சென்றது. தற்போது அதிகாரிகளின் கவனக் குறைவால் எந்த வகையிலும் ஆக்கிரமிப்புகள் குறித்து அக்கறை கொள்ளாதவர்களாக உள்ளனர்.இதனால் அவரவர்கள் வீடு கட்டும் போது முற்றிலும் படிகளை வாறுகால்களைத் தாண்டி தெருவில் கட்டியுள்ளனர். தொடர்ந்து தெருக்கள் அனைத்தும் 5 அடி முதல் 15 அடி சுருங்கி வருகிறது.அவசர தேவைக்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. தொடர்ந்து மழை காலங்கள் உட்பட நாள் தோறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கும் நிலை நீடிக்கிறது.சில பகுதிகளில் வாறுகால்களை துார்ந்து போகச் செய்துள்ளனர். இதனால் தொடர் மழையின் போது நகரில் உள்ள பழங்கால வீடுகள் மற்றும் கோயில்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.எனவே நகராட்சி பகுதியில் ஒட்டு மொத்தமாக அனைத்து தெருக்களிலும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நகராட்சி மற்றும் வருவாய்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
41 minutes ago
41 minutes ago
42 minutes ago
43 minutes ago