மேலும் செய்திகள்
கிராம ஊராட்சிகளில் 15ல் கிராம சபை
11-Aug-2025
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நேற்று சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நெய்வயல் ஊராட்சியில் திருவாடானையிலிருந்து நெய்வயல் வழியாக அதங்குடி செல்லும் யூனியன் ரோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு மாறுதல் செய்து பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ள அந்த ரோட்டை சீரமைக்க வேண்டும். இல்லையேல் ஆதார், ரேஷன்கார்டு அட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11-Aug-2025