உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆமை வேகத்தில் ஜல்ஜீவன் பணிகள்

 ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆமை வேகத்தில் ஜல்ஜீவன் பணிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஜல்ஜீவன் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் தரமற்ற முறையில் நடப்பதால் பணிகள் முழுமை அடைவது கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை குழாய் இணைப்பு மூலம் 2024க்குள் வழங்குவதற்காக ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. கொரோனா ஊரடங்கால் இத்திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் மேலும் ஓராண்டு கூடுதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆர். எஸ்.மங்கலம் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் மற்றும் பைப்புகள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின் பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சில பகுதிகளில் குறிப்பிட்ட வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பை வழங்கிவிட்டு போட்டோ எடுத்து செல்கின்றனர். அதே பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு இணைப்பு வழங்காத நிலை உள்ளது. இதுகுறித்து கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாக செயல்பட்டு வருவதால் இத்திட்டத்திற்காக பைப் லைன் பதிப்பதற்காக சேதப்படுத்தப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாத நிலை உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் மாணவர்களும், வயதானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி பகுதியில் தரமற்ற ஜல் ஜீவன் திட்டப் பணிகளை ஆய்வு செய்து அனைத்து வீடுகளுக்கும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி