உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கண்மாய் கரையில் அமைந்துள்ள விநாயகர், முத்து இருளப்பசாமி, பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி வழிபாடு, கோ பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டுக்கு பின்பு சிவ கணேசன் சிவாச்சாரியார் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது. முத்து இருளப்பசாமி பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகங்கள், பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுகுளத்துார் ஓதுவார்கள்​ உறவின் முறையினர் செய்தனர்.* முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர், பூக்குளம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட தம்புராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கணபதி வழிபாடு, கோ பூஜை,நாடி சந்தனம், இரண்டாம் கால பூஜை நடந்தது. கடம் புறப்பாட்டுக்கு பின்பு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. தம்புராட்டி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்கள் பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.தொண்டி: தொண்டி மகாசக்திபுரத்தில் வேதநாயகி அம்மன் உடனுறை ஆதிஈஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயில் கும்பாபிேஷகம் நேற்று காலை 11:30 மணிக்கு நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்கேனஸ்வர யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கருடபகவான் வானில் வட்டமிட கும்பத்திற்கு புனித நீர் நேற்று ஊற்றபட்டது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை