உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீ பாதுகாப்பு அறிவோம் மக்களுக்கு விழிப்புணர்வு

தீ பாதுகாப்பு அறிவோம் மக்களுக்கு விழிப்புணர்வு

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் 'வாங்க கற்றுக்கொள்வோம், தீ பாதுகாப்பு அறிவோம்,' உயிர் காப்போம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு நிலைய அலு வலர் மாடசாமி தலைமை வகித்தார். அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வகுப்பு மற்றும் விழிப்புணர்வு, தீயை அணைப்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார். பின்பு அலுவலகத்தில் பயன்படுத்தப் படும் இயந்திரங்கள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். பொதுமக்கள் பங்கேற்றனர். *ஆர்.எஸ்.மங்கலத்தில் நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில், பொதுமக்களை தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இயற்கை சீற்றம், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கையாள வேண்டிய அவசர கால தற்காப்பு நடைமுறைகள் குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கினர். * சாயல்குடி தீயணைப்பு அலுவலகத்தில் பயிற்சி நடந்தது. விபத்து நேரத்தில் பொதுமக்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது. முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை