உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரியில் மதுரை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி

கல்லுாரியில் மதுரை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் மதுரை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் டிச.27, 28ல் நடந்தது.பத்து அணிகள் பங்கேற்ற போட்டியில் முதல் இடத்தை சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரியும், மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாமிடம், காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி மூன்றாமிடம், ஆண்டிப் பட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லுாரி நான்காமிடம் பெற்றனர்.சாதனை வீரர்களை முகமது சதக் அறக்கட்டளையின் சிறப்பு இயக்குனர் ஹாமீத் இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், இயந்திரவியல் துறை தலைவர் கணேஷ் குமார், மின்னணுவியல் துறைத்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். உடற்கல்வி இயக்குனர் மருதாசல மூர்த்தி, செந்தில் முருகன், தவசிலிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை