உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இன்று மருத்துவ முகாம்

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இன்று மருத்துவ முகாம்

தொண்டி: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் திருவாடானை ஒன்றியம் தொண்டியில் இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. திருவாடானை ஒன்றிய வட்டார வளமைய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்று திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் தொண்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று (நவ.24) நடக்கிறது. காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும் இம் முகாமில் பெற்றோருக்கு பயிற்சி ஆலோசனை, வாழ்வியல் உதவிகள், உடன் பிறந்தோருக்கு ஆலோசனை வழங்கபடும். மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படும் என திருவாடானை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை