உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அடிப்படை வசதிக்கு ஏங்கும் நயினாமரைக்கான் ஊராட்சி

 அடிப்படை வசதிக்கு ஏங்கும் நயினாமரைக்கான் ஊராட்சி

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே நயினாமரைக்கான் ஊராட்சியில் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்தும் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நயினாமரைக்கான் கிராமத்தில் 5000த்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் தெருக்களில் பல இடங்களில் கழிவுநீரும் மழை நீரும் தேங்கி குளம் போல் சூழ்ந்துள்ளதால் சுகா தாரம் கேள்விக்குறியாக உருமாறி வருகிறது. நயினாமரைக்கான் கிராமத் தலைவர் மணி மாதவன் கூறியதாவது: நயினாமரைக்கான் கிழக்குத் தெரு, சக்தி புரம் செல்லும் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மக்கள் குறைதீர்க்கும் நாளில் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சமீபத்தில் திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்திற்கு கிராம மக்களின் சார்பில் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை. தெருக்களில் வழிந்தோடும் கழிவு நீரை முறையாக வடிகால் வசதி வேண்டும். பகலிலும் இரவிலும் கொசுக் கடித்து வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. சேதமடைந்த சாலையால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அடிப்படை வசதி கேள்விக்குறியாக உள்ளது. தனி அலுவலரின் செயல்பாடு முடங்கி யுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி