உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர்..  அலட்சியம்; ஓட்டல்களில் செயற்கை நிறமூட்டிய துரித உணவுகள்

ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர்..  அலட்சியம்; ஓட்டல்களில் செயற்கை நிறமூட்டிய துரித உணவுகள்

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல்,முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் பல ஓட்டல்கள், சிறு உணவகங்களில் அதிகளவு செயற்கை நிறமூட்டப்பட்ட உணவு பதார்த்தங்கள் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக துரித உணவுகளான ப்ரைட் ரைஸ், சவர்மா, சிக்கன் 65 மற்றும் சிக்கன் தொடர்பான அனைத்து உணவு பதார்த்தங்களிலும் அதிகளவு சுவையூக்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அசைவ உணவுகளில் அதிகளவு அஜினமோட்டோ உள்ளிட்ட செயற்கை வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ள இறைச்சிகளை மொத்தமாக ப்ரிட்ஜில் வைத்து அவற்றை மறுநாளும் உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை உண்பதால் வயிற்றுப்போக்கு, அலர்ஜி உள்ளிட்ட உடல் நலக் குறைபாடு ஏற்படுகிறது. பொறிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் நாள்பட்டதாக இருந்தாலும் அவற்றை மீண்டும் வைத்திருந்து உணவிற்காக பயன்படுத்துகின்றனர். தரமற்ற நிலையில் பயன்படுத்தப்படும் உணவுகளின் மாதிரிகளை எடுத்து உரிய விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் உணவு கலப்படத் தடுப்பு அலுவலர்கள் உள்ளனர். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவு தயாரிக்க கூடிய ஓட்டல்களை முறையாக ஆய்வு செய்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். குறிப்பாக வாழை இலைக்கு பதிலாக பச்சை பேப்பர் மற்றும் பாலித்தீன் தாள்களை பார்சலுக்கு பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. இதில் உரிய நடவடிக்கை வேண்டும் என்றனர். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ