உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் வடக்கு தெருவில் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ராமநாதபுரம் வடக்கு தெருவில் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வடக்கு தெரு திரவுபதி அம்மன் கோயில் அருகே 10 நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஐந்து இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தாலும் குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல், அடைப்பு, சேதம் காரணமாக கழிவுநீர் ரோட்டில் ஓடுவது வாடிக்கையாகியுள்ளது.குறிப்பாக கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வடக்கு தெரு திரவுபதி அம்மன் கோயில் அருகே பாதாள சாக்கடை நீர் குளம்போல தேங்கியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த பி.ராம்குமார் கூறியதாவது:பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி நகராட்சியில் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. துர்நாற்றத்தால் நோய் தொற்று அச்சத்தில் உள்ளோம். உடனடியாக சுத்தம் செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி