உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை குவியலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் ஆய்வு

 ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை குவியலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் ஆய்வு

தேவிபட்டினம்: தேவிபட்டினம் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டு வரும் குப்பையால் வாகன ஓட்டிகள் பாதிக்காத வகையில் தடுப்புகள் அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கிழக்கு கடற்கரை சாலையோரம் தேவிபட்டினம் அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் ரோட்டோரத்தில் உள்ள குப்பை காற்றின் திசையில் பறந்து செல்வதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல ஆண்டுகளாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் நிரந்தர தீர்வு ஏற்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது. நேற்று ராமநாதபுரம் பி.டி.ஓ., கிராம ஊராட்சி சோமசுந்தரம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ரோட்டோரத்தில் உள்ள குப்பையால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பாதிக்காமல் இருக்க குப்பை வெளியே தெரியாத வகையில் ரோட்டு பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதன் மூலம், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமமின்றி சென்று வரும் நிலை ஏற்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை