உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பழைய கட்டடம்

 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பழைய கட்டடம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பழைய அம்மா உணவக கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின் பெரும்பாலான பிரிவுகள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு பழயை கட்டடங்கள் அகற்றப்பட்டன. அம்மா உணவகம் செயல்பட்டு வந்த கட்டடத்தின் கூரை கடந்த ஜன., மாதம் பெயர்ந்து விழுந்தது. அதன் பின் அதில் அம்மா உணவகம் செயல்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது புதிய கட்டடத்தில் இடம் கொடுத்தும் அம்மா உணவகம் செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் பழைய கட்டடம் பூட்டப்படாமல் எவ்வித பாதுகாப்பின்றி உள்ளது. கட்டடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. சுவர்களில் செடிகள் முளைத்துள்ளது. கடந்த இரு நாட்கள் பலத்த மழை பெய்ததால் கட்டடத்தின் முகப்பில் உள்ள கூரை பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் ஆட்கள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் மருத்துவ மனைக்கு வருவோர் அப்பகுதியில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் கட்டடத்திற்குள் சிலர் சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். அக்கட்டடத்தை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி