உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வயலில் தண்ணீர் தேங்கியதால் நெல் அறுவடை பணி பாதிப்பு

வயலில் தண்ணீர் தேங்கியதால் நெல் அறுவடை பணி பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார், கூடலுார், நத்தக்கோட்டை, கருங்குடி, ஆயங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிர்கள் மகசூல் அடைந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக விளைந்த நெல் பயிர்கள் மழையால் சாய்ந்து சேதம் அடைந்தன. வயலில் தேங்கிய தண்ணீர் வெளியேற்ற வழியின்றி தேங்கியுள்ளது. ஈரப்பதத்தால் நெல் அறுவடை இயந்திரங்கள் வயல்களில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை பணியை துவங்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ