உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி லயன்ஸ் சங்க நலத்திட்ட உதவிகள்

பரமக்குடி லயன்ஸ் சங்க நலத்திட்ட உதவிகள்

பரமக்குடி,- பரமக்குடி லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சங்க தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கரபாண்டியன், நிர்வாகிகள் மனோகரன், ஜெகநாதன், டாக்டர்கள் ராமதாஸ், பார்த்தசாரதி, வக்கீல் தினகரன், பேராசிரியர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். முகமது உமர் வரவேற்றார்.லயன்ஸ் மாவட்ட கவர்னர் பிரான்சிஸ், பரிமளா பங்கேற்று தையல் மிஷின், மூன்று சக்கர வாகனம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். வெங்கட்டான்குறிச்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. கண் சிகிச்சை முகாம் மற்றும் லயன்ஸ் பள்ளியில் புதிய நுாலகம் துவக்கி வைக்கப்பட்டது. ரெங்கராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை