உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

 பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

தொண்டி: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொண்டி பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 15 வார்டுகள் உள்ளன. கழிவு நீர் கால்வாய் பராமரிப்பு இல்லை. குண்டும், குழியுமான சாலைகளால் பாதிப்பு, மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பது, கழிவு நீர் தாழ்வான பகுதியில் உள்ள சாலையில் தேங்கி நிற்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும், பேரூராட்சியின் தலைவர் மகன், பேரூராட்சி நிர்வாகத்தில் தலையீட்டை தடுக்க கோரியும், நேற்று தொண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகையிட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி