| ADDED : ஜன 14, 2024 04:16 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பொங்கல் பொருட்கள் வாங்க கிராமங்களில் இருந்து மக்கள் குவிந்ததால்பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது.ராமநாதபுரம் பகுதியை சுற்றியுள்ள அனைத்துப்பகுதியிலும் விவசாயம் அதிகம் உள்ளது. விவசாயிகளின் அறுவடையை கொண்டாடும் நாள் என்பதால் சூரிய வழிபாடு செய்து பொங்கலிட்டு வணங்குவது மரபு. கிராமங்களில் இருந்து பொங்கல் திருவிழாவிற்காக கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் செடி, நிலக்கடலை போன்ற பொருட்களை வாங்குவதற்காக மக்கள்அதிகளவில் திரண்டனர். இதனால் அரண்மனைப்பகுதியில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பொருள் விற்பனைகளை கட்டியது. பொதுமக்கள் கரும்பு, காய்கறிகள், பழங்கள்,பனங்கிழங்கு வாங்கி கடவுளுக்கு படைத்து சர்க்கரைபொங்கலிட்டு இயற்கையை வணங்கி, உழவுத்தொழில் சிறக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்வார்கள். கடைசி நேரத்தில் மக்கள் பொங்கல் பொருட்கள் வாங்க திரண்டதால்வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். இருந்தாலும்பொதுமக்கள் அதிக கூட்டத்திலும் பொருட்கள் வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டினர்.