உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடி அஞ்சலகத்தில் ஆதார் எடுக்க 10 நாளாக மக்கள் சிரமம்

கடலாடி அஞ்சலகத்தில் ஆதார் எடுக்க 10 நாளாக மக்கள் சிரமம்

கடலாடி: கடலாடி அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் இயங்குகிறது. இங்கு கடலாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் புதிய ஆதார் கார்டு எடுப்பதற்காகவும், பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளுக்காக வருகின்றனர்.இந்நிலையில் 10 நாட்களாக ஆதார் குறித்த எவ்வித வேலையும் செய்யாமல் முடங்கியுள்ளது.கடலாடி வெள்ளையம்மாள் கூறியதாவது:ஆதார் கார்டு விண்ணப்பிக்க ஒரு வாரத்திற்கும் மேலாக அஞ்சலகம் வந்து செல்கிறேன். ஆதார் கார்டு எடுப்பதற்கு அங்குஉள்ள பிரின்டர் மிஷின் சேதமடைந்து இருப்பதால் ஆதார் கார்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் செய்வதில் சிரமமாக உள்ளது எனக் கூறுகின்றனர். எனவே அஞ்சலக கோட்ட அலுவலர்கள் சேதமடைந்து பயன்பாடில்லாத பிரின்டரை மாற்றிவிட்டு புதிய பிரின்டர் அமைப்பதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ