மேலும் செய்திகள்
உய்ய வந்த அம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
3 minutes ago
வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு
4 minutes ago
கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி
5 minutes ago
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்க சாலைகளை தோண்டி பல இடங்களில் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வீட்டு உரிமையாளர்களிடம் குழாய் இணைப்பிற்கு பணம் கேட்பதாகவும் புகார் எழுந்தது. கடலாடி தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ராஜசேகர பாண்டியன், முன்னாள் மண்டல் தலைவர் சத்தியமூர்த்தி, மகளிர் அணி செயலாளர் ஜெய சரஸ்வதி உள்ளிட்ட பா.ஜ.,வினர் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், சாயல்குடி தெருக்களில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், குழாய் இணைப்பிற்கு பணம் கேட்பதாகவும் முறையாக குடிநீர் குழாய்களை பதிக்காமல் மேடு பள்ளங்களாக மாற்றியுள்ளதால் நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் தெரிவித்தனர். குழாய் இணைப்புக்கு பணம் கேட்கும் நபர்கள் குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் ஜல் ஜீவன் குழாய் இணைப்பு பணிகள் முடிந்தவுடன் சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
3 minutes ago
4 minutes ago
5 minutes ago