உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆட்டோவிற்கு தற்காலிக அனுமதி

ஆட்டோவிற்கு தற்காலிக அனுமதி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,முத்துக்குமரன் கூறியதாவது: ராமேஸ்வரத்தை மேம்படுத்த கோர்ட் கூறிய உத்தரவுப்படி ராமநாதசுவாமி கோயிலை சுற்றிலும் நான்குரத வீதியில் எவ்வித வாகனம் நிறுத்தக்கூடாது. ஒரு வார காலத்திற்கு மட்டும் சன்னதி தெருவில் பொதுமக்கள் மற்றும் கடைகாரர்களுக்கு இடையூறின்றி ஆட்டோவை நிறுத்திக்கொள்ளலாம். மாற்று இடம் ஒதுக்கப்பட்டவுடன் ஆட்டோக்களை அங்கு நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் மக்களை ஏற்றுவதற்கு மறுப்பது, கூடுதல் கட்டணம் பெறுவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி