உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி துப்பாக்கி சூடு சி.பி.ஐ., விசாரணை தேவை : தி.மு.க., பொருளாளர் வலியுறுத்தல்

பரமக்குடி துப்பாக்கி சூடு சி.பி.ஐ., விசாரணை தேவை : தி.மு.க., பொருளாளர் வலியுறுத்தல்

பரமக்குடி : ''பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்துமாறு தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் கூறுவேன். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். இவர், பரமக்குடி கலவரத்தை அடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகிய ஆறு பேரின்குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இவர் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியபடி, துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டது. 'ஜெ., அரசு தகுதியற்ற அரசு என்பதற்கு இதுவே உதாரணம். அரசும் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்குகிறது. உயிரின் மதிப்பு ஒரு லட்சம் தானா என பாதிக்கப்பட்டோர் கேட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்துமாறு கருணாநிதியிடம் கூறுவேன். நீதி விசாரணை அறிக்கைக்கும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. எனவே சம்மந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி