உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்தடை : பொது மக்கள் அவதி

ராமநாதபுரத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்தடை : பொது மக்கள் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத தொடர் மின்தடை ஏற்படுவதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் மின்தடை சிறிது சிறிதாக குறைப்பதற்கான நடவடிக்கையில் அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் குறைந்தது ஐந்து முறை மின்தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். ராமநாதபுரத்தில் போதிய ஆப்செட்டுகள் இல்லாததாலும், இரவிலும், காலையிலும் ஏற்பட்ட தொடர் மின்தடையால் வாக்காளர் பட்டியல் நகல் எடுக்க முடியவில்லை. இதனால் நேற்று காலை முதலே யூனியன் அலுவலகத்தை வேட்பாளர்கள், ஊராட்சி எழுத்தர்கள் முற்றுகையிட்டனர். பகல் 12 மணிக்கு பிறகே அனைவருக்கும் வாக்காளர் பட்டியல் நகல் வழங்கப்பட்டது. மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராமநாதபுரத்திற்கு வழுதூர் மற்றும் காவனூரிலிருந்து வரும் மின்பாதையில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் போது மீண்டும் பழுதாவதால் தொடர் மின்தடை ஏற்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ