புதுடில்லி கலைநிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாணவர்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் மாணவர்கள் புதுடில்லியில் நடந்த தேசிய குழந்தைகள் தின கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதுடில்லி தேசிய பாலபவனில் குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடந்தது. மத்திய கல்வி இயக்குநர் முக்தா அகர்வால் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகளில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மதுரை கலை பண்பாட்டு மையம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற சிலம்பாட்ட ஆசிரியர் ஆகாஷ் தலைமையில் நான்கு மாணவர்கள் பங்கேற்றனர்.பிரகுல்ரிங்பால் கிேஷார் இட்டை கம்பு, ஹரிபிரித்திவி ராஜ் ஒற்றைக்கம்பு, புகழ்மதி சுருள்வாள் வீசி திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.