| ADDED : பிப் 22, 2024 11:11 PM
மாவட்ட தலைநகரமானராமநாதபுரத்தில் அரண்மனை ரோடு, தலைமை தபால் நிலையம், வண்டிக்காரத் தெருவில் நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளன.மேலும் பஜார் பகுதியாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வாகனங்களில் மக்கள் அதிகளவில் வருகின்றனர். பாதசாரிகள்பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. சில கடைக்காரர்கள் முழுமையாக கம்பி வைத்தும், கட்டடம் அமைத்தும்ஆக்கிரமித்துள்ளனர். மேலும் வணிக வளாகங்கள், ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் ரோட்டின் இருபுறத்திலும் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களை கண்டபடி நிறுத்துகின்றனர். குறிப்பாக அரண்மனை ரோடு, தலைமை தபால்நிலையம், வண்டிக்காரத் தெரு இடங்களில் தினமும்போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதே போல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டோர நடை பாதை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. எனவே போக்குவரத்துமிகுந்த பகுதிகளில் ரோடு மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.