மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
10 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
10 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
10 hour(s) ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பகுதியில் மீன்துறை ஆசியுடன் தடை செய்யப்பட்ட இரட்டை மடியில் மீன் பிடிப்பதால் அதிக மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கடல் வளம், மீன் வளத்தை அழிக்கக் கூடிய இரட்டை மடியில் ( இரு விசைப்படகுகள் ஒரு வலையில் மீன்பிடிப்பது) மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் 500 ஜோடி விசைப்படகு மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடியில் தாராளமாக மீன் பிடிக்கின்றனர். நேற்று மீன்பிடித்து கரை திரும்பிய ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் வலையில் ஏராளமான கட்டா, குமுளா, பாறை மற்றும் சூடை, காரல் மீன்கள் டன் கணக்கில் சிக்கியது. இலங்கை கடற்படை கெடுபிடியால் தொழில் நஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கு இரட்டை மடியால் அதிக வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர். மீன்துறை ஆசி
மீன்துறை ஆசியுடன் மீனவர்கள் இரட்டைமடியில் பிடிப்பதால் அதிகாரிகளுக்கும் ஆதாயம் கிடைப்பதால் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் இரட்டை மடியில் மீன்பிடிப்பதை தடுக்காவிடில் கடலோர மீன்வளங்கள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது என சிறு தொழில் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago